
டிரக் வாங்குவது சார்ந்த கூடுதல் சேவைகள்


முறையான தகவலே வளர்ச்சியின் முதல்படி
ஃப்ளீட் எட்ஜ் மூலம் வாகனத்தின் தற்போதைய இருப்பிடம் சார்ந்த புதுப்பித்தலைப் பெறுங்கள்
இறுதி முடிவெடுப்பதில் இருந்து எதிர்கால திட்டமிடல் வரை, அனைத்திற்கும் முறையான தகவல்கள் உடனுக்குடன் கிடைப்பது அவசியமானது. டாடா மோட்டார்ஸில் தயாராகி, அதிநவீன இணைக்கப்பட்ட இயங்குதள தொழில்நுட்பத்துடணும் வரும் ஃப்ளீட்எட்ஜ் மென்பொருள், வணிக நிறுவனங்கள் வலுவான, தரவு சார்ந்த நிகழ்நேர நிலை சார்ந்து செயலாற்றி தங்கள் வளர்ச்சிக்கு ஏற்ற சிறந்த முடிவுகளை மேற்கொள்வதில் உதவி புரிகிறது
1.59L+
மொத்த பயனாளர்கள்
3.74L+
மொத்த வாகனங்கள்
456M+
மொத்த வாகனங்கள்


சுரக்க்ஷா வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம்
ஃப்ளீட் மேனேஜ்மென்ட் அமைப்பு ( FMS)
சுரக்ஷா என்று அழைக்கப்படும் டாடா மோட்டார்ஸ் வழங்கும் வருடாந்திர பராமரிப்பு சேவை, வாடிக்கையாளர்கள் வாகன பராமரிப்பு தொடர்பான பணிகள் மற்றும் கவலைகளை டாடா மோட்டார்ஸ் நிபுணர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு தங்கள் வணிகத்தில் முழுமையாகக் கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறது..
வணிக வாகன உரிமையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம், டாடாவின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் நிலையங்களின் (TASS) டீலர்களின் சர்வீஸ் ஸ்டேஷன்கள் மூலம் குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் வாடிக்கையாளருக்கு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவைகளை வழங்குகிறது.
டாடா மோட்டார்ஸின் பரிந்துரையின் கீழ், சர்வீஸ் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடைவெளிகளில், வாகனம் பயனத்துள்ள கிலோமீட்டர் சார்ந்து, இலவச சேவைகள் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் பணம் செலுத்த வேண்டிய அளவிற்கு, லேபர், பாகங்கள் உள்ளடங்கிய பராமரிப்பு சேவைகளை இந்த வருஆந்திர பராமரிப்பு சேவை (AMC) உள்ளடக்கியுள்ளது.
சில்வர், கோல்டு மற்றும் P2P (பே -டு- ப்ரோடெக்ட்) போன்ற பல்வேறு வகையான AMC திட்டங்கள் வழங்கப்படுகின்றன. AMC ஆனது எதிர்பாராத பழுதுபார்ப்புகளுக்கு எதிராக பாதுகாப்பை உறுதி செய்யும் மற்றும் திட்டமிடப்பட்ட பராமரிப்பு சேவைகள் மூலம் கணிசமான சேமிப்பை வழங்கும் ஒரு பராமரிப்புத் திட்டமாகும்.


சம்பூர்ண சேவா 2.0
டாடா மோட்டார்ஸ் டிரக் வாங்கும்போது, வாகனம் மட்டுமின்றி அதற்கான சர்வீஸ், சாலையோர உதவி, காப்பீடு, விசுவாசம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய உலகளாவிய சேவைகளையும் பெறுகிறீர்கள். சாம்பூர சேவா முழுமையான வாகனப் பராமரிப்பு சேவைகளை கவனித்துக் கொள்வதால் நீங்கள் உங்கள் தொழிலில் முழுமையாக கவனம் செலுத்தி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கலாம்.
சம்பூர்ண சேவா 2.0 முற்றிலும் புதியது மற்றும் மேம்படுத்தப்பட்டது. அத்தோடு, கடந்த ஆண்டில் எங்கள் மையங்களுக்கு வருகை தந்த 6.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரித்த கருத்துகளின் அடிப்படையில் இச்சேவை தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.
29 மாநில சர்வீஸ் அலுவலகங்கள், 250க்கும் மேற்பட்ட டாடா மோட்டார்ஸ் பொறியாளர்கள், நவீன உபகரணங்கள், வசதிகள் மற்றும் 24x7 மொபைல் வேன்களை துணையுடன் நீங்கள் பயனடைவீர்கள்.


டாடா OK
பயன்படுத்தப்பட்ட டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்களை வாங்க, விற்க டாடா OK சிறந்த தேர்வாகும். சிறந்த சந்தை விலைக்கான உத்தரவாதம், இருக்கும் இடத்திலேயே சேவை வழங்குதல் மற்றும் இலவச மதிப்பீடு போன்ற பல வசதிகளை இத்திட்டம் வழங்குகிறது. முறையான விற்பனை அல்லது வாங்கும் அனுபவத்தை உறுதி செய்வதற்காக, தருவித்தல் மற்றும் வாங்குதல், மதிப்பீடு, புதுப்பித்தல் புதுப்பிக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்தல் போன்ற ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.


டாடா குரு
2008-09 ஆம் ஆண்டில், TATA வணிக வாகனங்கள் சார்ந்து மேற்கொண்ட 6.9 மில்லியன் பழுதுபார்க்கும் சேவைகளில் 2.7 மில்லியன் மட்டுமே TATAவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் அல்லது சர்வீஸ் ஸ்டேஷன்களால் சர்வீஸ் செய்யப்பட்டன, அதாவது 60%-க்கும் மேற்பட்ட பணிகள் TATA மோட்டார்ஸால் சர்வீஸ் செய்யப்படவில்லை, மாறாக தனியார் அல்லது அங்கீகரிக்கப்படாத வொர்க்ஷாப்களில் மேற்கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்படாத வொர்க்ஷாப்களில் பயன்படுத்தப்படும் பாகங்களின் உண்மைத் தன்மைக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை - இது முற்றிலும் தனியார் வொர்க்ஷாப்பின் மெக்கானிக்கைப் பொறுத்ததே.
உதவி தேவையெனில், அழைக்கவும்.
விற்பனை / சேவை / தயாரிப்பு சார்ந்து தேவையான உதவி வழங்கப்படும். இந்தியாவில் உள்ள எங்களது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உதிரி பாகங்கள் தடையின்றிக் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.
இலவச எண்ணை அழைக்கவும்
